உலக மக்கள் தொகை: இந்தியா முதலிடம் பிடிக்கும்

391

138 கோடி மக்கள் தொகையுடன் சீனா, உலகின் முதல் நாடாக இருந்து வருகிறது. 2 – வது இடம் பிடித்துள்ள இந்தியாவில் 133 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயருவதால் 2027 – ல் இந்தியா முதல் நாடாக மாறும். அதேநேரம், 2065 க்கு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை குறைய வாய்ப்பு உள்ளதாக ஐ. நா. கணித்துள்ளது.

உலக மக்கள் தொகையை பொறுத்தவரை “டாப் டென் ” நாடுகள் பட்டியலின் படி சீனா இந்தியாவை தொடர்ந்து  அமெரிக்கா 3-வது இடம் வகிக்கிறது. 4-வது இடத்தில் இந்தோனேஷியாவும் 5- வது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் 6-வது இடம் வகிக்கிறது. நைஜீரியா 7-வது இடம் வகிக்க வங்கதேசம் 8-வது இடத்தில் உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் 9-வது இடம் ரஷியாவுக்கும் 10-வது இடம்  மெக்சிகோவுக்கும் கிடைத்துள்ளது.

இதனிடையே மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் வட மாநிலங்களில் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of