உலக பணக்காரர்கள் பட்டியல்: பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்

642

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த மைக்ரோ சாப்ஃட் நிறுவனர் பில்கேட்ஸ்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாவது இடத்துக்கு தள்ளினார்.

தற்போது,  பிரான்சை சேர்ந்த எல்.வி.எச்.எம். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், பில்கேட்ஸ்சை மூன்றாம் இடத்துக்கு தள்ளி உள்ளார்.

புளுபெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின் படி,அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். 108 பில்லியன் டாலர்  மதிப்பு சொத்துக்களுடன் எல்.வி.எச்.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

107 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் பில்கேட்ஸ் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement