“மால்கம்” உலகின் மிக நீளமான உப்பு குகை

404

உலகின் மிக நீளமான உப்பு குகை ஒன்று அண்மையில் இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அதற்கு மால்கம் என்று பெரியரிட்டுள்ளார்.

சாக்கடல் எனப்படும் ‘டெட் சீ’யை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ளது. இந்த குகை ‘சோடாம்’ என்று அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்கிறது.

இது சுமார் 10 கி.மீட்டர் நீண்டு கிடக்கிறது. குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குகின்றன. குகையின் சுவர்களில் படிந்து கிடக்கின்றன. அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிகிறது.

ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இவற்றை கண்டுபிடித்தனர்.

saltu2

தற்போதுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் இருக்கும் என கணக்கிட்டனர். 2006-ம் ஆண்டில் தெற்கு ஈரானின் கெசிம் தீவில் இருந்து 6 கி.மீட்டர் தூரத்தில் குகை இருப்பதையும், அதற்குள் உப்பு பாறை படிமங்களாக இருப்பதையும் அறிந்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of