உலகின் மிக நீளமான பாலத்தை திறக்கிறது சீனா

1342

சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாகக் கட்டிவருகிறது, இந்த உலகின் மிக நீளமான பாலத்தை வரும் 24-ம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. சீனாவில் இருந்து ஹாங்காங், மக்காவு பகுதிகளுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். ஆனால், இப்பாலம் கட்டப்பட்டதால் 45 நிமிடங்களில் சென்று விடலாம்.

இந்த ஆறு வழிப்பாலத்துக்காக 4 செயற்கைத் தீவுகள் ஏற்படுத்தப்பட்டன. 4 சுரங்கங்களும் உள்ளன. இந்தப் பாலம் மொத்தம் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதைக் கட்ட 4,20,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்திற்கு சீனா, பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட 14 நாட்டு நிபுணர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

china-hong-kong-bridge

இப்பாதையில் பேருந்துகள், கார்களுக்கு மட்டுமே அனுமதிக்கபடுவார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தற்போது கட்டப்பட்டுள்ள இந்தப்பாலம், உலகின் மிக நீளமான கடல்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of