“சூரியனுக்கே நெருப்பு தருவோம்..” கிரகணம் பற்றி உலக மக்களின் வினோத மூடநம்பிக்கைகள்..! ஷாக் ஆயிடுவீங்க..!

1444

வளைய சூரிய கிரகணம் என்பது பல்வேறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த சூரிய கிரகணத்தை காண்பதற்காக பல்வேறு தரப்பு மக்கள், சந்தோசத்துடன் வானத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தாளும், ஒரு சிலர் இன்னும் மூடநம்பிக்கைகளால், அச்சத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும், சூரிய கிரகணம் குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. அதற்கான காரணங்கள் குறித்தும், இதுகுறித்து விஞ்ஞானிகளின் கருத்து பற்றியும் விளக்கமாக பார்க்கலாம்.

தமிழகம் :-

ராகுவும், கேதுவும்தான் கிரகணங்கள் உண்டாகக் காரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால், ராகுவும், கேதுவும் இருப்பது உண்மையல்ல, அது கற்பனைக்கோள்கள் தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீனா :-

 டிராகன் எனப்படும் பாம்பு சூரியனை விழுங்கி விடுகிறது. இதனால் தான் சூரியனின் ஒளி பூமியில் விழுவதில்லை என்று சீனர்கள் நம்புகின்றனர். எனவே தான், கிரகணத்தின் போது மணிகளை அடித்து, அதீத ஒலிகளை எழுப்பி பாம்புகளை விரட்டுகிறார்கள்.

எஸ்கிமோ மக்கள் :-

மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படுவதைப்போன்று, சந்திரனுக்கும், சூரியனுக்கும் நோய்கள் ஏற்படுகிறது என்று கிரகணங்கள் பற்றி எஸ்கிமோ மக்கள் நம்புகின்றனர். மேலும், அப்போது வெளியாகும் சூரிய கதிர்களால், சூரியனுக்கு ஏற்பட்ட நோய் தங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

இந்த சூரிய கதிர்கள் தங்கள் உணவு சமைக்கும் பாத்திரங்களில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த பாத்திரங்களை கிரகணம் முடியும் வரை கவிழ்த்து வைக்கின்றனர்.

ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் :-

கிரகணத்தின்போது சூரியன் மெழுகுவத்தி அணைவதுபோல் அணைந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள். அதை மீண்டும் எரிய வைக்க, அம்புகளில் தீயை வைத்து சூரியனை நோக்கி ஏவுவார்கள்.

இவ்வாறு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிரகணம் குறித்து மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, கிரகணத்தைப் பற்றி சரியான புரிதல்கள் இருந்து விட்டால், இத்தகைய அச்சம் ஏற்படத்தேவையில்லை என்று தெரிவிக்கின்றனர்.

Advertisement