குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

591

காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாக சீர்கேடு காரணமாக பல இடங்களில் குடிநீர் முறையாக விநியோகிப்பதில்லை என்றும் குடிநீர் சுத்தமாகவும் வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் 30 வது வார்டுக்குட்பட்ட அன்னை சந்தியா நகர் பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வருகின்றன. இதை அருந்திய அப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக நகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், குடிநீரில் புழுக்கள் வருவது மிகவும் வேதனையாக இருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement