காம பிசாசு..! 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..!

2819

136 பாலியல் வல்லுறவுகள், எட்டு பாலியல் வல்லுறவு முயற்சிகள், 14 பாலியல் தாக்குதல்கள், 48 பாலியல் வன்புணர்வு – இவை, இரண்டு ஆண்டுகளுக்கிடையே ஒரே ஒரு நபரால் நடைபெற்ற சம்பவங்களின் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம், ஒரே ஒரு காம பிசாசு நடத்திய தாக்குதல் விவரங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

இங்கிலாந்து சட்ட வரலாற்று காலத்தில் மிக மோசமான பாலியல் வல்லுறவு குற்றவாளியாக உள்ளார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறும் அளவிற்கு ஒருவர் உள்ளார் என்றால் அது இந்தோனேசியாவைச் சேர்ந்த ரேயின்ஹார்டு சினாகா என்பவர் தான்.

இளம் ஆண்களை குறிவைத்து தொடர்ச்சியாக காம வேட்டையில் ஈடுபட்டு வந்த காமப் பிசாசு” என்று இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி சினாகா குறித்து கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, இவர் மிகவும் அபாயகரமான, குரூர குணம் கொண்ட, ஏமாற்றுக்காரராக இருக்கிறார், இவரை வெளியில் விட்டிருப்பது ஒருபோதும் பாதுகாப்பானதாக இருக்காது” என்று குறிப்பிடப்படும் அளவிற்கு கொடூரமான காம வெறியாட்டத்தில் ஈடுபட்டவர் என்று அந்தப் பெண் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

136 பாலியல் வல்லுறவுகள், எட்டு பாலியல் வல்லுறவு முயற்சிகள், 14 பாலியல் தாக்குதல்கள், 48 பேரிடம் பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இரவு நேர கிளப்கள் மற்றும் பார்களுக்கு வெளியே காத்திருக்கும் சினாகா, அங்கிருந்து வரும் ஆண்களை மது குடிக்கலாம் என்று கூறி, டாக்ஸி பிடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்று மோன்டனா ஹவுஸில் உள்ள தனது அடுக்கு மாடி வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து, சுயநினைவு இழந்ததும் தனது விருப்பத்துக்கு இரையாக்கிவிடுவார் என்று தெரிவிக்கின்றனர் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரிகள்.

இதை விட கொடுமை என்னவென்றால் பலருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது என்பதுதான். வரும் நபர்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து, தனக்கு இறையாக்கி பாலியல் தாக்குதலில் ஈடுபடுவதோடு அதை படமாக பதிவாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரால் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது தன்னுடைய வாழ்நாளில் ஒரு பாதியை அழித்துவிட்டதாக கண்ணீருடன் கூறியுள்ளனர். பலருக்கும் தாங்கள் பாலியல் வல்லுறவுக்கிற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பதே காவல்துறை விசாரணையின் போதே தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து வந்த சினாகா, இதுபோன்ற செயல்களில் குறைந்தது 10 ஆண்டுகளாவது ஈடுபட்டு வந்திருக்கிறார் என்றும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் சினாகா தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, இதற்கு தான் மட்டும் பொறுப்பல்ல எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் சினாகா குறித்து கூறும்போது, இவரின் குற்றச்செயல்களின் உண்மையான பாதிப்பு குறித்து ஒருபோதும் கண்டறிய முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல இங்கிலாந்து சட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாலியல் குற்றவாளியாக சினாகா தான் இருப்பார். எனவே தான் அவரை கொடூரமான காமப் பிசாசு என்று அழைப்பதாக கூறுகின்றனர்.

தனது செயலுக்கு இரையான ஒவ்வொருவரையும் அவர் செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அவை பல நூறு மணி நேரம் ஓடக் கூடியவையாக இருந்தன என்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினாகா மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே மிக மோசமான பாலியல் குற்றவாளியாக சினாகா உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குற்றச்சாடுகள் நிரூபிக்கப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள சினாகா உலகத்திலேயே மிகவும் கொடூரமான காம அரக்கனாக கருதப்படுகிறார். இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ள குற்றங்கள் வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நடந்தது என்பது அதிர்ச்சியின் உச்சம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of