16 கோடி மாஸ்க் வினியோகிக்க திட்டம் – ஜெகன் மோகன் ரெட்டி

1011

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, நாட்டிலேயே முதன்முறையாக, ஆந்திர மக்களுக்கு 16 கோடிக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை விநியோகம் செய்ய இருப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க முக்கவசம் உதவும் என்றும், எனவே ஒவ்வொருவருக்கும் தலா 3 முகக்கவசம் வழங்கப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஆந்திரத்தில் மக்கள் தொகை 5.3 கோடியாக உள்ளது என்றும், இதற்காக 16 கோடி முகக்கவசம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பொதுமக்களுக்கு உடனடியாக முகக்கவசங்களை வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement