பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் – ஆந்திர முதல்வர் அசத்தல்

263

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணிற்கு திசா என பெயர் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில குற்றவாளிகள் 4 பேரும் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுபோன்ற பாலியல் கொடுமைக்கு ஆளாவதை தடுத்து நிறுத்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திசா சட்டம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இதற்காக தனி காவல் நிலையங்கள், தனி நீதிமன்றங்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் முதல் திசா காவல் நிலையத்தை ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். இத்துடன் திசா செயலியையும் தொடங்கி வைத்தார்.