யமஹா தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததால் 800 தொழிலாளர்கள் பணி நீக்கம்

736

காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததாக கூறி, தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வல்லம் சிப்காட் பகுதியில் யமஹா இருசக்கர வாகனம் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைக்க சங்கம் ஆரம்பித்துள்ளனர்.

இதனால் 2 தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

இதனை கண்டித்து 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலத்துறையினர் விடுத்த அழைப்பை, தொழிற்சாலை நிர்வாகம் நிராகரித்துவிட்டடதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யமஹா தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 200 புதிய இரு சக்கர வாகங்களை உற்பத்தி செய்து வந்த நிலையில், தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் சுமார் 400 புதிய இரு சக்கர வாகங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of