ச்சே… செம்ம…யாஷிகா வெளியிட்ட வீடியோ..? – பிரம்மித்த நெட்டிசன்கள்..

1129

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் வலம்வரும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் அவர் தற்போது நட்பின் அருமையை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தெரியவில்லை.அவரது ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்று கூறியிருக்கும் அவரது பெயரில் இருக்கும் பதிவில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அதில் வயதான இருமுதியவர்கள் தங்களது நட்பினை ஆத்மார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பிரமித்தபடி அந்தபதிவில் பலரும் பாராட்டி வருகின்றனர்  இந்த வீடியோ பார்ப்போரை நெகிழவைத்துள்ளது. 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of