மாதவனின் மெகா ஹிட்டான படம்! 2ஆம் பாகம் உருவாகிறது!

290

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

நம்பி நாராயணன் பணியில் இருந்தபோது ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டதையும், பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான யாவரும் நலம் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வித்தியாசமான பேய் படமாக வந்து வசூல் குவித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார்.