எடியூரப்பா அரசுக்கு சிக்கல் – எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்

568

அமைச்சர்  பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், முதலமைச்சர் எடியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்வராக எட்டியூரப்பா கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 25 நாட்களுக்கு பிறகு நேற்று கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேட்சை எம்.எல்.ஏ உட்பட 17 பேர் அமைச்சராக பதவியேற்றுகொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கத்தில், மூத்த எம்.எல்.ஏ.க்களான உமேஷ்கட்டி, பாலச்சந்திர ஜார்கிகோளி, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்கும் அமைச்சர்  பதவி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால் உமேஷ்கட்டி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி பகுதியில்  சாலையில்  டயர்களை  எரித்து போராட்டம் நடத்தினர். திப்பாரெட்டிக்கு அமைச்சர்  பதவி கிடைக்காததால் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போதைய சூழலில் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் எட்டியூரப்பா அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of