“எனக்கு இன்னொரு பேர் இருக்கு” – பெயரை மாற்றிக்கொண்ட எடியூரப்பா..!

449

குமாரசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது பதவியை ராஜுனாமா செய்தனர். இதனால் கடந்த 23-ஆம் தேதி அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகள் பெற்றதால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைகோரினார்.

இந்நிலையில், நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இதற்கு முன் பதவியேற்றுக்கொண்ட 3 முறையுமே அவர் முழுமையாக ஆட்சி அமைத்தது இல்லை.

ஆன்மீகம், சோதிடம், வாஸ்து, ராசிக்கல், நியூமராலஜி ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட எடியூரப்பா, 3 முறையும் முழுமையாக பதவி வகிக்காததால், தற்போது நியூமராலஜி படி தன் பெயரின் ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங்கை மாற்றிக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது அவர் தன் பெயரை Yediyurappa என்று மாற்றிக்கொண்டுள்ளார். பெயரை மாற்றிக்கொண்டது போல், நல்ல ஆட்சியை கொடுத்து கர்நாடகாவில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of