திமுக கூட்டணிக்கு இஸ்லாமிய அமைப்பு ஆதரவு

217

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் அமைப்பு அறிவித்துள்ளது.

திருச்சியில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துகொண்டார்.

இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் பாபர் மஸ்ஜித் வழக்கில் சமரசம் செய்து முடிவெடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை விசாரித்து முடிவெடுக்க வேண்டும்,

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.