காதலியை கடத்தி பாலியல் பாலத்காரம் – சுற்றுலா சென்றபோது விபரீதம்

298
Yercaud-police-station

ஏற்காட்டில் காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், காதலி விடுதியில் இருந்து வெளியேறி உள்ளார்.

அவரை தேடி வாசுதேவனும் வந்துள்ளார்.

இவர்களை பின்தொடர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜியக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்துள்ளனர்.

பின்னர் வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி, அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here