இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 965 பேர் உயிரிழப்பு

465

கொரோனா வைரசுக்கு இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 965 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 9ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் மட்டும் 475 பேரும், ஸ்பெயினில் 105 பேரும், ஈரானில் 147 பேரும் இறந்துள்ளனர். பிரான்சில் 89 பேரும், அமெரிக்காவில் 41 பேரும், இங்கிலாந்தில் 33 பேரும் என மொத்தம் 8ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோன்று நேற்று ஒரே நாளில் 20ஆயிரத்து 455 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் 4ஆயிரத்த 207 பேருக்கும், அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா 3ஆயிரம் பேருக்கும் என மொத்தம், 2 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 84ஆயிரத்து 383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of