பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் அழிக்க முடியாது ?

186
rajendrabalaji12.3.19

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிருபர்களிடம் பேசினார். பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும். இதில் துளிஅளவும் சந்தேகமில்லை.

இந்த ஆட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த 10 எம்.பி.க்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் நாடகமாடுகின்றன. மானங்கெட்டவன்தான் தி.மு.க.வுடன் கூட்டு சேர்வான் என கூறிய ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ இன்று அந்த கட்சியுடன் ஒரு சீட்டுக்காக கூட்டணி அமைத்து மானங்கெட்டவனாக மாறிவிட்டார் என்று கூறினார்.

வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.–தி.மு.க.வுக்கு மட்டுமே இருமுனைபோட்டி. டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலோடு இருந்த சுவடு தெரியாமல் போய்விடுவார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது, இதில் கூட்டணியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பழம் பறிக்கலாம், சாப்பிடலாம். ஆனால் மரத்தை அழிக்க முடியாது.