பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது

510

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைத்து விட்டதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய ரவிசங்கர் பிரசாத், விலையை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என்றும், எனவே தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisement