“எங்க கிட்ட பேசுங்கப்பா..” காதல் தம்பதியின் பகீர் முடிவு

401

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், எடமாரிமண்டலம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரியும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர், காதல் மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வந்த தேவராஜ், பொங்கலை முன்னிட்டு, ஆரணியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு மனைவியுடன் வந்துள்ளார்.

இந்நிலையில், சித்தியின் வீட்டு பின்புறம் உள்ள புங்கைமரத்தில், இருவரும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த களம்பூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோர் பேசாததால் மன வருத்தத்தில் இருந்த இருவரும் தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of