ஈவ் டீசிங் செய்த முதியவர்! தனியாக வெளுத்து வாங்கிய பெண்!

606

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மாதிரியான சீண்டல்களுக்கு சட்டம் கடுமையானதாக இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறியவர்கள் முதல் வயது முதிர்ந்தோர் வரை எல்லா வகைப்பட்ட பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் ஈவ் டீசிங் செய்த முதியவர் ஒருவரை ஒரு பெண் வெளுத்து வாங்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,
ஒரு பஸ் சென்று கொண்டிருக்கிறது.

உள்ளே பயணிகள் நிறைய பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த ஆளுக்கு எப்படியும் 50 வயசுக்கு மேலதான் இருக்கும். அவரை இளம்பெண் சரமாரியாக வெளுக்கிறார். “டேய்.. என் கால்ல விழுடா மரியாதையா விழு இந்த வயசுல கால்ல விழ உனக்கு வெட்கமாக இருக்கா? எனக்கு இப்போ என் கால்ல நீ விழுந்தாகணும். விழுடா விழுடா” என்று கையால் அந்த நபரின் சொட்டை தலை, தோள்பட்டை என மாறி மாறி அடிக்கிறார்.

அதே பஸ்ஸில் பெண்கள் இருந்தாலும் இளம்பெண்ணுக்கு யாரும் துணையாக பேசவில்லை. துணிச்சலாக தனி ஒரு பெண்ணாவே காரியத்தில் இறங்கிவிட்டார். அந்த நபரோ பெண் அடிக்க அடிக்க, விழி பிதுங்கி பம்முகிறார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகளோ, அந்த நபரை இறக்கி விட்டுடலாம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அந்த இளம்பெண்ணோ விடவே இல்லை. என் கால்ல விழற வைக்கும் இவனை விட மாட்டேன் என்கிறார் ஆவேசமாக.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of