“குண்டு.. குண்டு.. குண்டு..” சக மாணவர்கள் கிண்டல்..! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

271

சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பூஜா என்ற பெண், தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இவரது தந்தையும், சகோதரரும் மும்பையில் பணியாற்றி வரும் நிலையில், தனது தாயுடன் பூஜா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் பருமனுடன் இருப்பதால், சக மாணவர்கள் பூஜாவை கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பூஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of