“பில்லி சூனியம்..” ஆட்டோவில் கதறிய இளம்பெண்..! பின்புறம் இருந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்த சக பயணிகள்..!

513

சென்னை அமைந்தகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஒன்றில் சக பயணிகளோடு இளம் பெண் ஒருவரும், 2 இளைஞர்களும் பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.

ஆட்டோ, என்.எஸ்.கே நகர் வந்தபோது அந்த இளம்பெண்ணின் தலைமுடியை பின்புறம் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் வெட்டியுள்ளனர். இதனால் ஆட்டோவிலேயே அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து ஆட்டோவில் இருந்த இளைஞர்கள் 2 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர். பின்னர் ஆட்டோவில் இருந்த பிற பயணிகள், அந்த இரண்டு பேரையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், இளம்பெண்ணின் தலைமுடியை எந்தவித காரணமும் இன்றி வெட்டியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் பில்லி சூனியத்துக்கு பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண், இதுபற்றி புகார் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இளம்பெண்ணின் தலை முடியை வெட்டிய வாலிபரின் பெற்றோரை வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of