ஆபாச படம்..! கள்ளக்காதலன் செய்த கேவல செயல்..! அதிரவைத்த பெண்..!

1031

சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என அழைக்கப்படும் அம்மன் சேகருக்கும், சாத்துமா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 வருடங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணை சேகர் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சேகரிடம் பழகுவதை நிறுத்திய அந்த பெண்ணுக்கு, அவரது வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து வந்துள்ளது.

இதனால், ஆத்திரம் அடைந்த சேகர், அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டி உள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அந்த பெண், சேகரை எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வந்தால் பரிசு தருவதாக கூறி அழைத்துள்ளார்.

அங்கு வந்த சேகரின் கண்களில் Fevi quick பசையை அந்த பெண் வீசி, சேகரை கழுத்தில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of