அண்ணன் முறை உள்ளவர் மீது காதல்..! எதிர்ப்பு தெரிவித்த தாய்க்கு இளம்பெண் செய்த கொடூரம்..!

1273

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கிராமத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு 12-வது படிக்கும் மகள் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த தனது தாய் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிறார். அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் மகள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அண்ணன் உறவு முறை உள்ள உறவினர் ஒருவரை அந்த இளம்பெண் காதலித்ததாகவும், இதற்கு தாய் மறுப்பு தெரிவித்ததால், இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, காதலியின் தாயிடம், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், கேட்டுள்ளார். மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், அந்த இளம்பெண்ணும், தனது பங்கிற்கு தாயிடம் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கெஞ்சி கேட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த தாய், முறை தவறிய காதலுக்கு ஒத்துழைக்க முடியாது என்று கூறி இருவரையும் கடுமையாக திட்டியுள்ளார்.

உன் மகளை நான் கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று கூறி அந்த நபர் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த விஷயம் தொடர்பாக அந்த இளம்பெண் தனது தாயிடம் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை முற்றியுள்ளது.

இதனால் கடும் கோபமடைந்த அந்த இளம்பெண், இரும்பு கம்பியைக்கொண்டு தனது தாயை தாக்கி கொலை செய்துவிட்டார். இவையனைத்தும் அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த பெண்ணிடமும், அவரது காதலரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறை தவறிய காதலால் தனது தாயை இளம்பெண் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of