கொடுத்த கடனை கேட்ட இளம்பெண்..!கன்மாயில் “ரெங்கையா” செய்த வெறிச்செயல்..! நீளும் விசாரணை..!

878

புதுக்கோட்டையில் இளம் பெண்ணை அவரது ஆண் நண்பரே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியை சார்ந்தவர் பாண்டிச்செல்வி(34). இவரது கணவர் குரு என்ற பெருமாள்.

இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது பாண்டிச்செல்வியின் கணவர் பெருமாள் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.

பாண்டிச்செல்வி நூறுநாள் பணித்தள பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும்போது அங்கு பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளர் மாற்றுத்திறனாளியான பெ.ரெங்கையா(36) என்பவருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22ம்தேதி ரெங்கையாவை சந்திக்க சென்ற பாண்டிச்செல்வி வீடுதிரும்பவில்லை. இதனால்23ம்தேதி பாண்டிச்செல்வியை காணவில்லை என அவரது தந்தை சோலைமுத்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த காவல்துறையினர், ரெங்கையாவை அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது, “நானும்பாண்டிச்செல்வியும்நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்தோம். பணம் கொடுக்கல் வாங்கலில் எங்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு வாழைக்குறிச்சி பெரிய கண்மாய்க்கு அருகே நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பாண்டிச்செல்வி கொடுத்த நகை, பணத்தை உடனடியாக திரும்ப தரச்சொல்லி வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் கையில் இருந்தகத்தியால் பாண்டிச்செல்வியை கழுத்தறுத்து கொலை செய்தேன். அவரது உடலை வாழைக்குறிச்சி பெரிய கண்மாய் பகுதியில் புதைத்துவிட்டேன்”என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து வாழைக்குறிச்சி பெரியகண்மாய்க்கு கொலையாளி ரெங்கையாவை அழைத்து சென்று பொன்னமராவதி காவல்துணை கண்காணிப்பாளர் பி.தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் ச.கருணாகரன் வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பாண்டிச்செல்வியின் உடல் கிராம உதவியாளர்கள் உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டு உடல்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரெங்கையா ஊனமுற்றவர் என்பதால் அவர் ஒருவரால் இக்கொலையை செய்திருக்க முடியாது என்றும்,கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of