கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவி… திருவாரூரில் இளம் பட்டதாரி.. உள்ளாட்சி தேர்தலில் வாகை சூடிய இளம்பெண்கள்..!

695

ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும், 22 வயது பிபிஏ பட்டதாரியும் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிகழ்வு அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரியை அடுத்த கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றதை அடுத்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22 வயதான பிபிஏ பட்டதாரி ஆர்.சுபிதா போட்டியிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆர்.சுபிதா வெற்றி பெற்று உள்ளார்.