எட்டுக்கால் பூச்சிக்கு கொலை மிரட்டல் – காவல் துறையினரிடம் பிடிபட்ட வாலிபர்

337

மேற்கு ஆஸ்திரேலியாவில், காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகார், ஒரு வீட்டில் இருந்து சிறு குழந்தை அழும் குரலும் ஒருத்தர் ‘நீ இறந்து விடு’ என்று மிரட்டும் குரலும் கேட்டது என ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பின் அந்த வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு அந்த சம்பவம் நிகழ்வு அதிர்ச்சி அளித்தது. விசாரணையில் அந்த வாலிபர், மிரட்டிக்கொண்டிருந்தது எட்டுகால் பூச்சியை தான் குழந்தையை அல்ல என்பது.View image on Twitter

எட்டுகால் பூச்சியை கண்டு பயமுடைய அந்த இளைஞர், பயத்தால் தான் அப்படி சத்தம் போட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதற்கு காவல்துறையினரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டார்.
பின் இந்த  சம்பவம் குறித்து அந்த காவலர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 ‘நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை – அந்த எட்டுகால் பூச்சியை தவிர’ என ட்விட் செய்துள்ளார்.