ஆன்லைன் சூதாட்ட மோகம்..! தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

232

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இவருக்கு, சூதாட்டத்தில் ஈடுபாடு அதிகம் என்று கூறப்படுகிறது.

இதனால், இவர் ஆன்லைனில் நடைபெறும் சூதாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து சூதாட்டத்தில் தோல்வி ஏற்பட்டுள்ளதால், சமீபகாலமாகவே வெங்கடேசன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடைக்கு சென்று வருகிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார் வெங்கடேசன். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இறுதியில் வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of