பட்டப்பகலில் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் அடித்துக் கொலை

622

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வினய் என்பவர் அப்பகுதியில் உள்ள கடையில் சிகரெட் வாங்கியதற்கு பணம் தராமல், கடை உரிமையாளர் ராஜ்தீப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கடை உரிமையாளருக்கு ஆதரவாக அவரது நண்பர் மகாதேவய்யா பேசியதால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் நகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தபோது நண்பர்களுடன் வந்த வினய், மகாதேவய்யாவை கிரிக்கெட் பேட்டால் கண்மூடித்தனமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த மகாதேவய்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Advertisement