ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட வேண்டும் -வெங்கையா நாயுடு

717

இந்திய இளைஞர்கள் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுகொண்டுள்ளார்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, தமிழில் வணக்கதுடன் உரையை தொடங்கிய அவர், தமிழும் தமிழ்நாடும் தன் மனதுக்கு நெருக்குமானவை என்று தெரிவித்தார். தாய் மொழி ஒருவருக்கு கண் பார்வை போன்றது என்றும், அதை ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

அம்மாவை அம்மா என்று தான் அழக்க வேண்டும் என்றும் மம்மி டாடி என்று அழைக்க கூடாது என அறிவுறுத்தினார். கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே அதிக இடைவெளி உள்ளதாகவும், இதனை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய இளைஞர்கள் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றும், இன்றையகால இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement