இளம் வயதில் விவாகரத்து கேட்டு வருபவர்களை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும் – நீதிபதி கிருபாகரன்

615

இளம் வயதில் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வருபவர்களுக்கு அறிவுரை கூறி கணவன், மனைவியை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை பெருங்குடியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் 361 மாணவ, மாணவிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆகியோர் பட்டங்களை வழங்கினர்.

அதன் பின்னர் மேடையில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அமெரிக்காவில் 25 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவராக இருந்துள்ளனர் என்றும், தற்போது வழக்கறிஞர்கள் தான் உலகத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

நில விவரகாரங்கள் நீதிமன்றம் மூலம் தீர்வுக்கு வர 10 ஆண்டுகள் ஆகிறது என்றும், ஆனால் கட்டபஞ்சாயத்து வழக்கறிஞர்கள் 24 மணி நேரத்தில் தீர்த்து வைப்பதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of