சவுதியில் வீட்டுச் சிறையில் இருந்து வெளியேறி தாய்லாந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது.

729

சவூதியில் பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் கெடுபிடிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் அடையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதன்படி, சவுதியில் வீட்டுச் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறி வெளியேறிய ரஹஃப் என்ற இளம்பெண், விமானம் மூலம் தாய்லாந்து சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து வீடு திரும்பினால் கொல்லப்படுவேன் என அஞ்சி சமூக வலைதளம் மூலம் உதவிகோரிய ரஹஃபுக்கு, எந்த நாடாவது அடைக்கலம் அளிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சவுதி இளம் பெண் ரஹாஃபுக்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் கோரிக்கையை ஏற்று கனடா அரசு இந்த முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த நடவடிக்கையால் இருநாடுகள் இடையே நிலவி வந்த பிரச்சனை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement