இளம் வாக்காளர்களின் பட்டியல்! தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா?

136

நாடாளுமன்ற தேர்தலுக்கான இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், 20.10 லட்சம் வாக்காளர்களுடன் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.

16.70 லட்சம் வாக்காளர்களுடன் உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், 13.60 லட்சம் வாக்காளர்களுடன் மத்திய பிரதேசம் 3வது இடத்திலும் இருக்கின்றன.

ராஜஸ்தானில் 12.80 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 11.90 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 8.90 லட்சம் பேரும், ஆந்திராவில் 5.30 லட்சம் பேரும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

கடந்த தேர்தலை விட, இந்த முறை இளம் வாக்காளர் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து இருப்பதாகவும், அவர்களில் 1.50 கோடி பேர் 18 முதல் 19 வயதை உடையவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.