பட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்..! மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..!

411

திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு, மணமக்களிடம் கையளவு நீளம் கொண்ட பட்டாக்கத்தியை கொடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், அண்மையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவர் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement