தனுஷ் பட வசனத்தால் சிக்கலில் சிக்கிய இளைஞர்..! ஏன் தெரியுமா..?

1535

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் 3-வது முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் வடசென்னை. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இந்த திரைப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற, வசனத்தால் நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கொடியாளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவர் வலிவலம் காவல் நிலையம் முன் நின்றவாறு வீடியோ பதிவு செய்து, அதை நடிகர் தனுஷ் நடித்த வட சென்னை படத்தின் பின்னணி இசையில் எடிட் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “நம்மை காப்பாற்றி கொள்ள ரவுடிசம் செய்யலாம்” என்ற வசனத்தையும் பேசியிருக்கிறார். இந்த வீடியோ, போலீசாரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக கூறி கார்த்தியை கைது செய்தனர்.