“கூலிங் கிளாசை கழட்டு, போடக்கூடாது..,” – இளைஞர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்..!

693

கடலூர் மாவட்டத்தில் உள்ளது எம்.பட்டிக்குடிகாடு என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அழகேசன் என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, பைக்கில் வெளியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த 4 பேர், அழகேசனை தாக்கியுள்ளனர். பின்னர், எங்க முன்னாடி கூளிங் கிளாஸ் போடக்கூடாது, அதை கெழட்டு. பைக்கு எங்க முன்னாடி ஓட்டக்கூடாது.

தள்ளிக்கிட்டு தான் போகனும் என்று கூறியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகேசன், காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of