“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..!

912

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. பாம்பை பார்த்தால், ஊரே நடுங்கும். இவ்வாறு இருக்க இளைஞர் ஒருவர் பாம்பை தான் பாத் ரூமிற்கு எடுத்து சென்று, அதை தன் கைகளில், எதோ கைக்குட்டையை பிடிப்பது போன்று பிடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் வரும் இளைஞர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும் தகவல் இல்லை. ஆனால் இது இணையத்தில் தற்போது படுவைரலாக பரவி வருகிறது.

முதலில் அந்த பாம்பிற்கு, சோப்பு போடும் அந்த நபர், நுரை வரும் அளவிற்கு நன்றாக தேய்க்கிறார். அதன்பிறகு, அந்த பாம்பிற்கு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி விடுகிறார். அட போங்கப்பா, அது பல்லு புடுங்குன பாம்பா இருக்கும்.

அப்படியே இருந்தாளும், அந்த பாம்பை பிடிக்க எத்தனை பேருக்கு தைரியம் வரும். இவ்வாறெல்லாம் டுவிட்டரில் அனல்பறக்க வாதங்கள் நடைபெற்று வருகின்றது. ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி கலந்த வியப்பில் உள்ளனர்.

ஒடுற பாம்பை கையில புடிக்கிற வயசு என்று சொல்வார்கள், இவரைப் பார்த்த பிறகு, ஓடுற பாம்பை குளிப்பாட்டி விடுற வயது என்று தான் சொல்ல வேண்டும் போல. ஆனா இந்த வீடியோவை பார்க்கும்போது, அது பல்லு புடுங்குன பாம்பாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of