“மோடி ஜி-யை காப்பாத்தணும்,” ஏர்போர்ட்டிற்கு துப்பாக்கியோடு வந்த நபரால் பரபரப்பு..!

551

மதுரை விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர், பயணிகள் செல்லும் பாதையில் தனது இருசக்கர வாகணத்தை நிறுத்தினார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த இளைஞரை பிடித்து பரிசோதனை செய்தனர்.

அப்போது, அவரது கையில், ஏர்கன் துப்பாக்கிகள் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், தான் மோடியின் பாதுகாப்புக்கு டெல்லி செல்ல இருக்கிறேன் என்றும், தன்னை அழைத்து செல்ல விமானம் வந்திருக்கிறது என்றும் அந்த நபர் கூறினார்.

இதனால் குழப்பமடைந்த அவர்கள், அந்த இளைஞரை பெருங்குடி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் பெயர் அஸ்வத்தாமன் என்பதும், அவர் வெங்கட சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்த காவல்துறையினர், பெற்றோரை எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement