கொரோனா பயத்தால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

147

கோவை மாவட்டத்தில் கொரோனா பயத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் இந்த நோய்க்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கோவை காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அரசூர் பகுதியில் சி.என்.சி. ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

காய்ச்சலுக்கு காரணம் கொரோனாவாக இருக்குமோ என அஞ்சிய அந்த இளைஞர் இன்று கோவை நோக்கி வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of