பொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி! தட்டிக்கேட்டவர் கொடூர கொலை!

661

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய் சாகர். இவர் கடந்த 13-ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது நெக்லஸ் ரோட்டில் ஒரு ஜோடி எல்லை மீறி நடந்துக்கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த சாய், அவர்களிடம் ஏன் பொது இடத்தில் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் என்று, அங்கிருந்த ஆணிடம் சத்தம் போட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், சாயின் தலையில் கல்லைப்போட்டு கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சாயை, அவரது நண்பர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி கொன்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சாய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement