திருமணம் செய்து வைக்காததால் இளைஞர் தற்கொலை.

251

மதுரை மேலூர் அருகேயுள்ள கொட்டக்குடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் சரவணன். ஆட்டோ டிரைவர். இவர் அந்தப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் சரவணன் தனது பெற்றோரிடம் ‘நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அண்ணனுக்கே இன்னும் திருமணமாகவில்லை, உன் தங்கையும் திருமண வயதில் உள்ளார். எனவே 3 ஆண்டு காத்திரு என்று அறிவுரை கூறினார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன் ‘பிரேக் ஆயில்’ குடித்து மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தெய்வேந்திரன் மேலூர் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of