விபத்தில் சிக்கிய இளைஞர்.. காப்பாற்ற முயன்ற காவல் துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

738

வேலூர் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த ராஜா என்ற இளைஞர், காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு இசையை கேட்டவாறு இருசக்கர வாகனத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி இருசக்கர வாகனத்துடன் ராஜா தூக்கி எறியப்பட்டார். ராஜா இடப்புறமாக விழுந்ததாலும், ஹெல்மெட் அணிந்ததாலும், படுகாயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து அங்கு காண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ராமதாஸ் என்பவர் பதறியடித்துச் சென்று அந்த இளைஞரை மீட்டு குடிக்கத் தண்ணீர் கொடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மதுபோதையில் இருந்த அந்த இளைஞரின் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.

தன் மீது வழக்கு போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில், தன்னை விட்டுவிடுங்கள், நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி, போலீசாரின் கால்களில் விழுந்து கெஞ்சி மன்றாடினான். இருப்பினும் தலைமை காவலர் ராமதாஸ் பிடிவாதம் செய்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இளைஞரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of