“பில்லி சூனியத்தால் போன உயிர்..” தலையில்லாமல் கிடந்த பிணம்..! அதிர்ந்த போலீசார்..!

4410

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள தாஷிசார் என்ற பகுதியில் தலையில்லாத பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். தலையில்லாத உடல் என்பதால், கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டறிய, அப்பகுதியில் காணாமல் போனாவர்களின் வழக்குகளை காவல்துறையினர் புரட்டினர்.

அதில், உயிரிழந்து கிடப்பவர் விஷ்ணு நாகரே என்பது தெரிய வந்தது. இதையடுத்து விஷ்ணு நாகரேவின் குடும்பத்தினர் மூலம் உயிரிழந்து கிடப்பது அவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், விஷ்ணு நாகரேவின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில், தானே பகுதியில் விஷ்ணு நாகரேவின் தலையும் கண்டெடுக்கப்பட்டது. இந்த விசாரணையில், அமித் நாகரே என்ற நபர் தான் விஷ்ணு நாகரேவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். விஷ்ணு நாகரே தனது தந்தையின் மீது பில்லி சூனியத்தை ஏவி விட்டதாகவும், இதன் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது தந்தை உயிரிழந்ததாகவும் அமித் நாகரே தெரிவித்தார்.

இதனால் விஷ்ணு மீது கடும் கோபத்தில் இருந்த அமித், அவரை எப்படியாவது கொலை வேண்டும் இருந்துள்ளார். இதனை தனது நண்பர்களிடம் கூறவே, அவர்களின் உதவியுடன் விஷ்ணு நாகரேவை அமித் கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார், அமித் நாகரேவின் நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.  பில்லி சூனியம் செய்ததால் விஷ்ணு நாகரே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement