Pubg விளையாடிய இளைஞர்கள் பலி! தொடரும் விபரீதம்!

1037

நாகேஷ் கோரே (24) அன்னபுர்னே ( 22) ஆகிய இரண்டு இளைஞர்களும் பப்ஜி விளையாடிபடி ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஐதராபாத் – ஆஜ்மீர் ரயிலில் இருவரும் அடிபட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இளைஞர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு வன்முறை சிந்தனையை அதிகரிப்பதாக பரவலாக புகார்கள் எழுப்பப்படுகிறது.

Advertisement