திருட்டுத்தனமாக மீன்பிடித்த இளைஞர்கள் ட்ரோனால் சிக்கிய மீன் திருடர்கள்

754

குத்தகைக்கு எடுத்த குளத்தில் அடிக்கடி மீன் திருடு போவதை கண்டுபிடிக்க டுரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது திருட்டுத்தனமாக மீன்பிடித்த இளைஞர்கள் தப்பியோடிய சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உகந்தான்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தை ரஸ்தா பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். மீன் வளர்ப்பு பணியை குளத்தில் செய்து வந்த நிலையில் அடிக்கடி மீன் திருடு போனதும் சிலர் பதுங்கி இருந்து திருட்டுத்தனமாக மீன் பிடித்து எடுத்துச் செல்வதும் அவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குளத்தை சுற்றி ட்ரோன் கேமரா பறந்த போது, திருட்டுத்தனமாக மீன்பிடித்து கொண்டிருந்த சில இளைஞர்கள் அலறி அடித்து வயல் வெளிக்குள்ளும் மோட்டார் அறை குள்ளும் தெறித்து ஓடினர். இந்த காட்சிகள் அனைத்தும் ட்ரோன் கேமராவில் பதிவானது. குளத்தில் மீன் திருட்டு போவது  தொடர்பாக பலமுறை புகாராக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில் நவீன உத்தியை கையாண்டு கண்காணிப்பில் ஈடுபட்டதாக குத்தகைதாரர் தெரிவித்தார்.

Advertisement