அதிகரிக்கிறது இளைஞர்களின் ஆர்வம் !

367
firsttimevoters14.3.2019

தேர்தல்களம் சூடுபிடிக்க ஆரமித்துவிட்ட இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த தமிழக தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக பல்வேறு வகையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் கட்டாயம் வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 31-ந் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of