“இது தான் நடமாடும் குளியலறையா..” மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் செய்த அட்டூழியம்..!

312

கிறுக்குத்தனமாக சிலர் செய்யும் விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. இவ்வாறு செய்தால் நாமும் பிரபலம் அடைவோம் என்ற எண்ணத்தில் பலரும் இதுபோன்ற வீர சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்ற சம்பவம் ஒன்று வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. ஹூய்ன்தன் கான் என்ற 23 வயது வாலிபரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மேலாடை அணியாமல் பயணித்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் நடுவில், ஒரு பக்கெட் இருக்கிறது.

அதில் உள்ள நீரை மோட்டார் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், தன் மீதும், ஹூய்ன்தன் கான் மீதும் ஊற்றிக்கொண்டே சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ஜெட் வேகத்தில் வைரலாக பரவியது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறு அவர்கள் குளித்துக்கொண்டு போனது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கத்தொடங்கிய காவல்துறையினர், மோட்டார் சைக்கிளின் வாகன எண்ணை வைத்து ஹூய்ன்தன் கானை கைது செய்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக அவருக்கும், அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றவருக்கும் தலா 80 டாலர் (சுமார் ரூ.5,600) அபராதம் விதித்தனர். ஓட்டுனர் உரிமம் பெற்றிராத ஹூய்ன்தன் கானுக்கு, மோட்டார் சைக்கிளை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of