இளைஞரின் உயிரை பறித்த டிக்-டாக் மோகம்

319

தெலங்கானாவில் டிக்டாக் மோகத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் பிரேம்கல்லை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் 2 நாட்களுக்கு முன் தடுப்பணைக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது தடுப்பணையில் பாய்ந்து வந்த நீரில் ஆபத்தை உணராது தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார்.

திடீரென நீரின் வேகம் அதிகரிக்க, மூன்று பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 2 பேர் நீந்தி கரையேறிய நிலையில், தினேஷ் மட்டும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். தீயணைப்பு துறையினரின் 48 மணி நேர தேடுதலுக்கு பின், தினேஷின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of