அடிக்கடி வழக்குப்பதிவு – டிக்-டாக் மூலம் பழிவாங்கிய இளைஞர்

523

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் இருந்து இளைஞர் ஒருவர், அரிவாளோடு வெளியே வருவதை போன்ற டிக்-டாக் வீடியோ இணையத்தில் வைரலானது.

விசாரணையில், வீடியோ வெளியிட்ட நபர் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர வர்மா என்பது தெரியவந்தது.

தன் மீது போலீசார் அடிக்கடி வழக்குப்பதிவு செய்வதால், பழிவாங்கும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டதாக மகேந்திர வர்மா கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரை தேடி வருகின்றனர்.